மிதமான இரவு உணவால்
கண்ணிமை விரிய மாட்டாமல்
கவிழ.. உடலம் உறக்கத்தில் ஆழ..
ஆழ்ந்த கறுமையத்திற்கு சென்ற
எண்ண அலைகள்
இனிய நெடுங்கனவாய் மிதந்தன!
நாவாய் போல நீந்திய எண்ண அலைகள்
நீண்ட இரவின் தொடுவானத்தில்
கண்டது ஒரு பெண்ணை வானவில்லாய்!
நேரத்தினை மணிக்காட்டியின் முட்கள்
துரத்துவது போல
என் கனவு அப்பெண்ணை துரத்த…
முடிவற்றதாய் இருந்தது
தொடுவானம் ..
என்றும் தொடா வானமாய்..
தொட்டும் விடு தூரம் தான் வானம் என்று
சொல்ல கேட்டுருக்கிறேன்! ஒவ்வொரு இரவும்
தொடாமலே வருகிறேன்!
கனவு கலைந்து எழுவதே
தொடர் நிகழ்ச்சியாய் இருக்க
கனவு கைகூடும் நாள் எது?
Advertisement