என்னவளின் வருகையை
எதிர்நோக்கும் கண்கள்
சிறிதும் இமையாமல்
வழியே பழியாய் கிடக்க..
அமைதியற்ற என் மனம்
தாமதித்து வருபவளிடம்
காரணம் கேட்க
கணைகளை கூர்படுத்த…
அவள் வந்த வினாடி
அனைத்து வன்மமும் மறைந்து
குறு நகையும்
ஓரிரு கண்ணீர் துளிகளுமாய்…
கரைந்தது இன்ப வெள்ளத்தில்
என் காதல்…
Advertisement