உனைக் காண தவிக்கும்
கண்களுடன் நடந்தேன்
நீண்ட நெடுந்தொலைவு
அந்த இறுதியடையா…
தொலைவினலே
தொலைந்தே போனேன்..
வானில் செல்லும் ஊர்தியாய்..
மிகச்சிறிய புள்ளியாய்
மறைந்த உன்னை..
தேடித்தேடி
என்னைத் தொலைத்தேன்
நீண்ட பெருவெளியில்..
கிடைக்கரியா முத்து போல..
சொட்டு மழை நீரை கையிலேந்தி
அதில் உனைத் தேடி பார்க்கிறேன்
மழை நின்ற மாலையின்
சாரல் காற்றில் தெறிக்கும் முல்லையின்பாற்
நீ சிந்திய சிரிப்பை தேடி பார்க்கிறேன்